சிறிய ரக விமான விபத்து கனடாவில் பலர் பலி
டோரண்டோ: வட அமெரிக்க நாடான கனடாவின் கிழக்கு பகுதியில் ஆறு பேர் பயணிக்க கூடிய சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்தனர். விசாரணை முடிந்த பின்னரே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் விபரமும் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
வெடிகுண்டு வெடித்துஆப்கனில் 16 பேர் பலி
காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் சாலையோரம் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 12 பெண்கள் இரு குழந்தைகள் உட்பட 16 பேர் பரிதாபமாக பலியாகினர்.
துபாயில் கார் விபத்துஇந்திய டாக்டர் பலி
துபாய்: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அந்த கார் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. அதில் பயணம் செய்த இந்தியாவை சேர்ந்த டாக்டர் ஜான் மார்ஷல் ஸ்கின்னர் 60 என்பவர் தீயில் கருகி பலியானர்.