பாக்., ராணுவ தலைமை தளபதி பதவி காலம் நீட்டித்து உத்தரவு

Added : நவ 28, 2019
Advertisement

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் குவமார் ஜாவித் பஜ்வாவின் பதவி காலத்தை, நிபந்தனை அடிப்படையில், ஆறு மாதங்கள் நீட்டித்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டது.பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் குவமார் ஜாவித் பஜ்வாவின் பதவி காலம், நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அவரது பதவிகாலத்தை, மூன்று ஆண்டுகள் நீட்டித்து, பாக்., பிரதமர் இம்ரான் கான், கடந்த ஆகஸ்ட்டில் ஆணை பிறப்பித்தார்.இதை எதிர்த்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 'ராணுவ தலைமை தளபதியின் பதவி காலத்தை நீட்டிக்கும் அதிகாரம், அதிபருக்கு மட்டுமே உள்ளது' என கூறி, இம்ரானின் உத்தரவை, இரு தினங்களுக்கு முன் ரத்து செய்து உத்தரவிட்டது.இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நேற்று விசாரித்தது.அதிகாரிகள் பதவி நீட்டிப்பு விவகாரத்தில், ஆறு மாதங்களுக்குள் சட்ட திருத்தம் கொண்டுவர, அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், ராணுவ தலைமை தளபதி பஜ்வாவின் பதவி காலத்தை, நிபந்தனைகளுடன், ஆறு மாத காலம் நீட்டித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.''நீதிமன்ற உத்தரவு, நாட்டின் வெளியே உள்ள எதிரிகளுக்கும், உள்ளே இருக்கும் கொள்ளையர்களுக்கும், ஏமாற்றமாக அமைந்திருக்கும்,'' என, இம்ரான் கான் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X