பொது செய்தி

தமிழ்நாடு

125 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு

Added : நவ 28, 2019
Advertisement

காஞ்சிபுரம்:மாநில அளவிலான உணவு உற்பத்தி, 125 லட்சம் மெட்ரிக் டன் ஆக இருக்க வேண்டும்,'' என, வேளாண் அதிகாரிகளுக்கு, அத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், வேளாண் துறையின், இரண்டாவது மண்டல அளவிலான உணவு தானிய இயக்க ஆய்வுகூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலுார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருந்து, வேளாண் துறையின் பல்வேறு நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், வேளாண் இயக்குனர் பேசியதாவது:வேளாண் துறையின் முக்கிய திட்ட பணிகளில் முக்கியமானது, உணவு உற்பத்தியை அதிகரிக்க செய்வது. இதில், உணவு தானிய இயக்கம் முக்கிய திட்டமாகும்.சாகுபடி பரப்பை அதிகமாக்குவது மட்டுமல்லாமல், சராசரி உற்பத்தி திறனையும் அதிகப்படுத்த வேண்டும்.

மாநில அளவில், 96 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பில், உணவு உற்பத்தி நடக்க வேண்டும். இவற்றில் இருந்து, 125 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்ய, இலக்காக நிர்ணியக்கப்பட்டு உள்ளது.நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகை பயிர்களின் அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்களை, விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X