பொது செய்தி

தமிழ்நாடு

நெல்வாய் ஏரி மதகு திறப்பு விவசாய பணிகள் தீவிரம்

Added : நவ 28, 2019
Advertisement
 நெல்வாய் ஏரி மதகு திறப்பு விவசாய பணிகள் தீவிரம்

மதுராந்தகம்:நெல்வாய் கிராம ஏரியில், மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வருவதால், சாகுபடிக்கான பணிகளில், விவசாயிகள் தீவிரம் காட்ட துவங்கி உள்ளனர்.

மதுராந்தகம் ஒன்றியம், நெல்வாய் கிராமத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், 300 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறும். கடந்த, 2015ம் ஆண்டுக்கு பின், ஏரி முழுமையாக நிரம்பவில்லை. மூன்று நாட்களாக, விட்டு விட்டு மழை பெய்து வருவதால், நெல்வாய் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஏரி நிரம்பும் என, விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.இந்நிலையில், பாசனத்திற்காக, ஏரியின் மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள், நிலங்களில் உழவுப் பணிகள் மற்றும் நாற்று உற்பத்திக்கு நெல் விதைப்பு போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X