சிறுபாக்கம் : சிறுபாக்கம் அருகே சாராயம் விற்ற வழக்கில் கைது செய்த நபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
சிறுபாக்கம் சப் - இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், கடந்த 12ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வடபாதி அருகே மோட்டார் பைக்கில் சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் சிறுபாக்கம் அடுத்த வடபாதியை சேர்ந்த ராயப்பிள்ளை, 56; என்பதும், 120 லிட்டர் சாராயத்தை எடுத்து சென்றதும் தெரிய வந்தது.சிறுபாக்கம் ராயப்பிள்ளையை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, கடலுார் சிறையில் அடைத்தனர்.அவர் மீது, சிறுபாக்கம் மற்றும் விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவில் ஐந்து வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.அவரது தொடர் குற்ற செயலை கட்டுப்படுத்த, எஸ்.பி., ஸ்ரீஅபினவ் பரிந்துரையின் பேரில், கலெக்டர் அன்புச்செல்வன், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.