பொது செய்தி

தமிழ்நாடு

ராமசாமி படையாட்சியார் மணி மண்டப நுாலகத்திற்கு கம்ப்யூட்டர் வழங்க முடிவு

Added : நவ 28, 2019
Advertisement

கடலுார் : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கடலுார் வணிகர் பேரமைப்பின் சார்பில், தியாகி ராமசாமி படையாட்சியார் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கடலுார் பேரமைப்பின் தலைவர் துரைராஜ் மாலை அணிவித்தார். தமிழக பெட்ரோலிய வணிகர் சங்க மாநில தலைவர் முரளி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் சண்முகம், கடலுார் பேரமைப்பின் பொருளாளர் தேவி ஓட்டல் முருகன். ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் சுமங்கலி நிஷ்டர்அலி ,சீனுவாசன், பட்டேல், வெங்கடேசன், செல்லபாண்டியன், பிரகாஷ், பாலாஜி, சுப்ரமணியன், சாட் வெங்டேசன், சூர்த்தியமூர்த்தி, ஓட்டல் ஆனந்தபவன் ராம்கி நாராயணன், சம்யுத்தா, அமுதவள்ளி, வள்ளிலாஸ் ரவிசங்கர், மோகன், சேகர், முதுநகர் ரமேஷ், விஸ்வேஸ்வரன், கனரா வங்கி ராமலிங்கம், கரூர் வைஸ்சியா வங்கி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், மணி மண்டபத்தில் உள்ள நுாலகத்திற்கு, 3 கம்ப்யூட்டர் வழங்கப்படும் என அதன் தலைவர் துரைராஜ் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X