பொது செய்தி

தமிழ்நாடு

காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு மனு

Added : நவ 28, 2019
Advertisement

கடலுார் : காதல் திருமணம் செய்த ஜோடி, பாதுகாப்பு கேட்டு எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.

புதுச்சத்திரம், வேளங்கிப்பட்டை சேர்ந்தவர் ரஜினிகாந்த் மகள் ஜெயவர்ஷினி, 20; இவர், அவரது காதல் கணவர், அதே பகுதியை சேர்ந்த வீரப்பன் மகன் ராகவன், 27; என்பவருடன் கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார்.மனுவில் 'நாங்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்தோம். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வீட்டை விட்டு வெளியேறி கடந்த வாரம் வடலுார் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். இரு வீட்டின் பெற்றோரும் மிரட்டுகின்றனர். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X