சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரத்தில் ஜீப் மோதி விபத்து; அதிகாரி உட்பட 6 பேர் காயம்

Added : நவ 28, 2019
Advertisement

மயிலம் : மயிலம் அருகே மரத்தில் ஜீப் மோதிய விபத்தில் மின் வாரிய அதிகாரி உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து திண்டிவனம் பகுதியில் டிரான்ஸ்பார்மர்களை சோதனை செய்ய விழுப்புரத்தைச் சேர்ந்த துணை பொறியாளர் சிவபிரகாசம், 35; மற்றும் மின் வாரிய ஊழியர்கள் திண்டிவனம் நோக்கி நேற்று காலை 11:50 மணிக்கு ஜீப்பில் வந்து கொண்டிருந்தனர். ஜீப்பை டிரைவர் முருகன், 52; ஓட்டினார்.கூட்டேரிப்பட்டு அடுத்த கேணிப்பட்டு பெட்ரோல் பங்க் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் மரத்தில் மோதியது.இதில் ஜீப்பில் பயணம் செய்த சிவப்பிரகாசம், முருகன், டெக்னிக்கல் பணியாளர்கள் முகமது இலியாஸ் 31; ஜெயபாரதி, 28; அருள்முருகன், 40; அறிவுக்கரசன், 38; உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். உடன் அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X