சிதம்பரம் : கொத்தங்குடி கிராமத்தில் பல லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட கிராம சேவை மையம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராததால், அரசு பணம் பாழாகிறது. கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த கொத்தங்குடி ஊராட்சி அண்ணாமலை நகர், சிதம்பரம் நகரையொட்டி உள்ளதால், ஊராட்சி நகர் பகுதியாகவே காணப்படும்.
கொத்தங்குடி ஊராட்சி நகர் பகுதியில் அரசு அலுவலர்கள், பல்கலைக்கழகத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். இங்கு, கொத்தங்குடி மாரியம்மன் கோவில் தெருவில், மகாத்மா காந்தி தேசிய கிராம வேலை திட்டத்தின் கீழ், 2014-15 நிதியாண்டில், 14.43 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கிராம சேவை மையம் கட்டப்பட்டது.ஆனால் சேவை மையம் திறக்கப்படவில்லை. தற்போது இந்த கட்டடம், மது அருந்துபவர்களின் பாராகவும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த மையத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE