சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷ வண்டு கடித்து மூன்று பேர் மயக்கம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே விவசாய பணியில் ஈடுபட்டவர்களை விஷ வண்டு கடித்ததில் 2 பெண்கள் உட்பட மூன்று பேர் மயக்கமடைந்தனர்.விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பத்தில் மறைந்த புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது நேற்று காலை 9:45 மணிக்கு நிலத்தில் சிறுவள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த மீனாட்சி, 45: கன்னிகா, 42; ஆகியோர் விவசாய

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே விவசாய பணியில் ஈடுபட்டவர்களை விஷ வண்டு கடித்ததில் 2 பெண்கள் உட்பட மூன்று பேர் மயக்கமடைந்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பத்தில் மறைந்த புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது நேற்று காலை 9:45 மணிக்கு நிலத்தில் சிறுவள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த மீனாட்சி, 45: கன்னிகா, 42; ஆகியோர் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு திடீரென பறந்து வந்த விஷவண்டு அவர்களை கடித்தது. பின்னர் பக்கத்து நிலத்திலிருந்த வெட்டுக்காட்டைச் சேர்ந்த கோவிந்தன், 65; என்பவரையும் கடித்தது. இதில் மயக்க மடைந்த மூவரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2ம் தேதி இதே நிலத்தில் விஷ வண்டு கடித்ததில் முன்னாள் எம்.எல்.ஏ., புருஷோத்தமன் இறந்தார். இந்நிலையில் தற்போது அதே நிலத்தில் மூவரை விஷ வண்டு கடித்துள்ளது. வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் இருக்கும் விஷ வண்டுகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X