பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுடன் கலந்தாய்வு

Added : நவ 29, 2019
Advertisement

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரவை துவங்குவதற்கான ஆலோசனை கூட்டத்தில், விவசாயிகள், ஆலையின் தலைவர் கலந்து கொண்டனர்.

தலைமை கரும்பு அலுவலர் மணிமாறன் வரவேற்றார். ஆலை மேலாண்மை இயக்குனர் சாதனைக்குறள் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகிகள் முத்துசாமி, ஆதிமூலம், அண்ணாதுரை, கார்மாங்குடி வெங்கடேசன், கலியமூர்த்தி, இளவரசன், ராமசாமி, ஆலை அலுவலர்கள் முனியம்மாள், ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எத்தனால் தயாரிப்பு தொழிற்சாலை துவங்க வேண்டும். கூட்டு மின் உற்பத்திக்காக மின் உற்பத்தி பிளான்ட் பணி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி கிடப்பில் போடப்பட்டுள்ளது. கூட்டுமின் உற்பத்தியை துவங்க வேண்டும்.கடந்த 2013-14ம் ஆண்டு, மாநில அரசின் கரும்பு கூடுதல் தொகை நிலுவையில் உள்ளதை வழங்க வேண்டும். நடப்பு பருவத்தில் 15 நாட்களுக்குள் முழு தொகையையும் கரும்பு வெட்டி அனுப்பும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வாகனங்களின் வாடகையை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்டன.இதற்கு பதிலளித்து ஆலையின் தலைவர் கானுார் பாலசுந்தரம் பேசியதாவது:ஆலைக்கு அருகில் வெள்ளாறு செல்வதால், சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு, எத்தனால் ஆலை துவங்கப்படவில்லை. இருப்பினும், ஆலை நிர்வாகம், தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளது.மேலும், ஆலையின் மொலாசஸ், கடந்த காலங்களில் டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரத்திற்கு வழங்கப்பட்டது. தற்போது நிர்வாகம் மற்றும் எனது முயற்சியின் பயனாக, ஒரு டன்னுக்கு, 11 ஆயிரத்து 750 ரூபாய் விலை கிடைத்துள்ளது.அதேபோல், கடந்த காலத்தில், ரூ. 193 கோடி கடனில் இயங்கி வந்தது. தமிழக அரசிடம் அணுகி, கூட்டுறவு வங்கிகளில் இருந்த, 120 கோடி ரூபாய் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வாகன வாடகை, போர்டு மீட்டிங் நடைபெறும் போது, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வழங்க முயற்சி எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இந்தாண்டு அரவை பணி துவங்குவதற்கு, முன்பாக டிசம்பர் 2ம் தேதி, இளஞ்சூடேற்று விழா நடைபெற உள்ளது. பின்னர் 15 நாட்களுக்குள் அரவை துவங்கப்படும்.விவசாயிகள், ஆலையின் அதிகாரிகள் கரும்பு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கரும்பு அலுவலர் ரவிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X