பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த செங்கை

Added : நவ 29, 2019
Advertisement
 சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த செங்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு பிரிந்து தனி மாவட்டமாக உதயமாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுமக்கள் விரும்பும் இடங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
சுற்றுலா பகுதிகள்கலைச்சிற்பங்களுக்கு பெயர்போன, பல்லவர் கால சிற்பங்கள் நிறைந்துள்ள மாமல்லபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய நகராக விளங்குகிறது.முட்டுக்காடு படகு குழாம், முதலியார் குப்பம், ஆற்காடு நவாப் கோட்டை, ஆலம்பரை குப்பம், பறவைகள் சரணாலய பகுதி, வேடந்தாங்கல், வண்டலுார் வன உரியியல் பூங்கா.ஆன்மிக பகுதிகள்செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோவில், கோதண்டராமர் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், கோட்டைவாயில் அஞ்சநேயர் கோவில், சிங்கபெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் மற்றும் தியாகராஜ கோவில், அனுமந்தபுரம் அகோர வீரபத்திரர் கோவில், திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோவில், பொன்விளைந்தகளத்துார் முன்குடுமீஸ்வரர் கோவில்.திருப்போரூர் கந்தசுவாமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவில், திருமலைவையாயூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள்கோவில், மதுராந்தகம் கோதண்டராமர் கோவில், வெண்காட்டீஸ்வரர் கோவில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவில், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில். கோவளம் மசூதி மற்றும் கிறிஸ்துவ ஆலயம்.முக்கிய ரயில் நிலையங்கள்செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம்.
மாவட்டத்தின் முக்கிய ஆறுபாலாறு, கிளியாறு, நீஞ்சல் மடுவு.முக்கிய ஏரிகள்மதுராந்தகம், செங்கல்பட்டு கொளவாய் ஏரி, பொன்விளைந்தகளத்துார், பல்லவன் குளம் ஏரி.தடுப்பணைகள்மழைக்காலத்தில், பாலாற்றில் ஓடும் தண்ணீர், வீணாக வங்கக் கடலில் கலக்கிறது. கரையோர பகுதிகளின் குடிநீர், விவசாய நீர் ஆதாரம் கருதி, பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த இரு தடுப்பணைகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் உள்ளது. செங்கல்பட்டு அடுத்த பாலுார் பகுதியில், 16.5 கோடியில், 2015ல் தடுப்பணை அமைக்கப்பட்டது. தொடர்ந்து, அணுசக்தி துறை நிதி, 32.5 கோடி ரூபாய் மதிப்பில், கடலுார் - வாயலுார் இடையே முகத்துவார தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
'நபார்டு' திட்டத்தில், 30 கோடி ரூபாய் மதிப்பில், ஈசூர் - வல்லிபுரம் இடையே, மற்றொரு தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.சாலைகள்சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, சதுரங்கப்பட்டினம் - திருத்தணி சாலை.மாவட்ட கல்லுாரிகள்செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை அறிவியல் கல்லுாரி, ஐ.டி.ஐ., கல்லுாரி, அரசு சட்டக் கல்லுாரி, மாமல்லபுரம் அரசு கட்டட சிற்பக்கல்லுாரி, நென்மேலி, சென்னை பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லுாரி, மேலக்கோட்டையூர் அரசு உடற்கல்வியியல் பல்கலைக் கழகம், மாம்பாக்கம் அரசு சட்டக் கல்லுாரி; முட்டுக்காடு ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்கள் ஆய்வு கல்வியகம்; காட்டுப்பாக்கம் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம்.நீதிமன்றங்கள்செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் இயங்குகிறது. முதன்மை மாவட்ட நீதிமன்றம், மகளிர் மாவட்ட நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தலைமைக்குற்றவியல் நீதிமன்றம் உட்பட, 11 நீதிமன்றங்கள்.அணுமின் நிலையம்நாட்டின் முக்கிய அணுசக்தி பகுதியான கல்பாக்கம், செங்கல்பட்டில் அமைந்துள்ளது. இந்திரா அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்ட அணுசக்தி நிறுவனங்கள் இயங்குகின்றன.
தொழிற்பேட்டைகள்
மறைமலை நகர், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, ஆலத்துார், சிறுசேரி.போக்குவரத்து கழக பணிமனைகள்செங்கல்பட்டு, கல்பாக்கம், மதுராந்தகம், தாம்பரம்.முக்கிய மருத்துவமனைகள்செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை, நெஞ்சக மருத்துவமனை.சர்க்கரை ஆலைமதுராந்தகம் அடுத்த, படாளம் பகுதியில், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை.செங்கல்பட்டு அடுத்த, பாலுார் ரயில் நீர் குடிநீர் ஆலை.மின்வாரிய கோட்டங்கள்செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம்,ஸ்ரீபெரும்புதுார், திருமழிசை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X