பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலர் பணி 4,040 பேர் விண்ணப்பம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
காஞ்சிபுரம்:ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள, 38 ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு, 4,040 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், திருப்போரூர் உள்ளிட்ட ஒன்பது வட்டாரங்களில், 38 ஊராட்சி செயலர்கள் காலி பணியிடங்களை, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, நவ.,

காஞ்சிபுரம்:ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள, 38 ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு, 4,040 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், திருப்போரூர் உள்ளிட்ட ஒன்பது வட்டாரங்களில், 38 ஊராட்சி செயலர்கள் காலி பணியிடங்களை, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, நவ., 11ம் தேதி முதல், 25ம் வரை, அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.இந்த காலி பணியிடங்களுக்கு, 4,040 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், திருப்போரூர் ஒன்றியத்தில், கீழூர், காரணை ஆகிய ஊராட்சிகளில் உள்ள இரு இடத்திற்கு, 317 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.'தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை தரம்பிரிக்கும் பணிக்கு பின், அவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்' என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X