சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு கஷாயம் வழங்கல்

Added : நவ 29, 2019
Advertisement
 நிலவேம்பு கஷாயம் வழங்கல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சன்னிதி தெருவில், நேற்று காலை, துப்புரவு பணியாளர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர், டெங்கு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர்.நிகழ்ச்சியை, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி துவக்கி வைத்தார். பின், சன்னிதி தெருவில் உள்ள, 16 கால் மண்டபம் அருகில், கோவிலுக்கு செல்வோருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினர்.
உண்டியல் வசூல் ரூ.12.42 லட்சம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில், நேற்று காலை, அறநிலையத் துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி முன்னிலையில், உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.இதில், 12.42 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. மேலும், 43 கிராம் தங்கம், 410 கிராம் வெள்ளியை, பக்தர்கள், காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
பட்டா கோரி ஆர்ப்பாட்டம்
திருப்போரூர்: அரசு புறம்போக்கு மற்றும் கோவில் மடம் நிலங்களில், குடியிருக்கும் மக்களுக்கு, மனை பட்டா வழங்க கோரி, பொதுமக்கள் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருப்போரூர் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, தாலுகா அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். தொடர்ந்து, கோரிக்கை மனுவை, தாலுகா அலுவலகத்தில் அளித்தனர்.
வேளாண் துறை விழிப்புணர்வு
மதுராந்தகம்: சித்தாமூர் வட்டார வேளாண் துறை சார்பில், 'அட்மா' திட்டம் மற்றும் வேளாண் தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு பேரணி, மதுராந்தகத்தில் நேற்று நடந்தது. திருவளர்சேரி கிராமத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர். தமிழக அரசின் கூட்டுப்பண்ணை திட்டம், பிரதமரின் பயிர் காப்பிடு மற்றும் நுண்ணீர் பாசன திட்டம், சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கான மானியம், பயிர் காப்பீடு உள்ளிட்டவை குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
'டவர்' அமைக்க எதிர்ப்பு
பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த, நந்தியம்பாக்கம் பகுதியில் உள்ள திருவீதி அம்மன் கோவில் தெருவில், நுாற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.அந்த குடியிருப்பு பகுதியின் மத்தியில், மொபைல்போன் டவர் அமைக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. தகவல் அறிந்து சென்ற அப்பகுதி மகளிர் அமைப்பினர் பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர்.உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும், மொபைல் போன் டவரை அனுமதிக்க மாட்டோம் என, பணிகளை மேற்கொண்ட ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சமாதான பேச்சில் ஈடுபட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர் பணிகளை நிறுத்தியதுடன், மொபைல்போன் டவர் அங்கு அமைக்கப்படாது என, உறுதி அளித்தனர். அதன்பின், பெண்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X