சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' கடை முற்றுகை

Added : நவ 29, 2019
Share
Advertisement
மணிமங்கலம்:மணிமங்கலம் கிராமத்தில், புதிதாய் அமைக்கப்பட்ட, 'டாஸ்மாக்' கடையை, பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.படப்பை அருகே, மணிமங்கலம் ஊராட்சியில், இரண்டு தினங்களுக்கு முன், புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மணிமங்கலம் பகுதி மக்கள், அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இதையடுத்து, கடையில் இருந்த ஊழியர்கள், கடையை, தற்காலிகமாக மூடி

மணிமங்கலம்:மணிமங்கலம் கிராமத்தில், புதிதாய் அமைக்கப்பட்ட, 'டாஸ்மாக்' கடையை, பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

படப்பை அருகே, மணிமங்கலம் ஊராட்சியில், இரண்டு தினங்களுக்கு முன், புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மணிமங்கலம் பகுதி மக்கள், அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இதையடுத்து, கடையில் இருந்த ஊழியர்கள், கடையை, தற்காலிகமாக மூடி சென்றனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:மணிமங்கலத்தில் பழமையான பெருமாள் கோவில், சிவன் கோவில் உள்ளன. இங்கிருந்த டாஸ்மாக் கடை, பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள கடையை, நிரந்தரமாக மூடாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X