காஞ்சிபுரம்:பெண்ணின் இறப்புக்கு காரணமானோர் மீது நடவடிக்கை கோரி, உறவினர்கள், மறியல் செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த, ஆண்டி சிறுவள்ளூர் காலனியைச் சேர்ந்த, 19 வயது பெண், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவரை, காரை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 24, என்பவர், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், 24ம் தேதி, வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற இளம்பெண், நேற்று முன்தினம், சிறுவாக்கம் ஏரி அருகே உள்ள தோப்பில், மரத்தில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். தாலுகா போலீசார், சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்த பெண்ணின் உறவினர்கள், நேற்று, அரசு மருத்துவமனை எதிரில், மறியலில் ஈடுபட்டனர்.இளம்பெண் மரணத்திற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், ராஜேஷை பிடித்து விசாரித்து வருகின்றனர்.