சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எல்.எண்டத்துாரில் சாலை மறியல்

Added : நவ 29, 2019
Share
Advertisement
மதுராந்தகம்:எல்.எண்டத்துாரில், கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி அப்பகுதியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதுராந்தகம் ஒன்றியம், எல்.எண்டத்துார் கிராமத்தில், மாரியம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, காமராஜர் தெரு உள்ளிட்ட தெருக்களில், 400 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இந்த தெருக்களின் சாலையில், கழிவு நீர் கால்வாய் இல்லை.

மதுராந்தகம்:எல்.எண்டத்துாரில், கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி அப்பகுதியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம் ஒன்றியம், எல்.எண்டத்துார் கிராமத்தில், மாரியம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, காமராஜர் தெரு உள்ளிட்ட தெருக்களில், 400 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இந்த தெருக்களின் சாலையில், கழிவு நீர் கால்வாய் இல்லை. இதனால், ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி, கொசு உற்பத்தி ஆகிறது. மேலும், இப்பகுதியில் வசிக்கும் பலருக்கு, இதுவரை, வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, அச்சிறுப்பாக்கம்- - உத்திரமேரூர் சாலையில், எல்.எண்டத்துார் கிராமத்தினர், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெருக்களில் கால்வாய் வசதி, வீட்டு மனை பட்டா கோரி, கோஷம் எழுப்பினர்.உத்திரமேரூர் போலீசார் வந்து, உயர் அதிகாரிகளிடத்தில் இதுகுறித்து பேசி தீர்வு காணப்படும் என, கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X