சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

'நீட்' தேர்வை எதிர்ப்பது, 'கல்லா' கட்டவா?

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019
Share
Advertisement
மருத்துவர் கே.தங்கமுத்து, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 1967-ல், தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட, எம்.பி.பி.எஸ்.,சுக்கான தேர்வு முறையே, தி.மு.க ஆட்சியிலும் கடைப்பிடிக்கப்பட்டது.அந்த காலகட்டத்தில் தான், எம்.பி.பி.எஸ்.,-சில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே, திமு.க.,வின், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாநில

மருத்துவர் கே.தங்கமுத்து, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
1967-ல், தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட, எம்.பி.பி.எஸ்.,சுக்கான தேர்வு முறையே, தி.மு.க ஆட்சியிலும் கடைப்பிடிக்கப்பட்டது.அந்த காலகட்டத்தில் தான், எம்.பி.பி.எஸ்.,-சில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே, திமு.க.,வின், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாநில அமைச்சர்களை சுற்றி திருவிழா கூட்டம் போல, மாணவர்களும், பெற்றோரும், அவர்களின் பரிந்துரைக்காக, பின்னாலேயே சுற்றி திரிந்தனர்.எம்.பி.பி.எஸ்., சீட் பெற, எம்.பி., - எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர்களிடம் பல லட்சங்களை அன்பளிப்பாக அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு, பெற்றோர் தள்ளப்பட்டனர்.சிபாரிசு, அன்பளிப்பு மட்டுமே மருத்துவ சீட் கிடைக்க, வழி என, எழுதப்படாத சட்டமாக அமலில் இருந்தது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சில ஆண்டுகளாக, 'நீட்' என்ற அகில இந்திய அளவிலான கடுமையான நுழைவு தேர்வை நடத்தி வருகிறது. இதில், கிராமப்புற மாணவர்கள், ஏழை, எளியோரும் வெற்றி பெற முடியாது என, தமிழகத்தில் பரப்பப்பட்டு வருகிறது.'மருத்துவ துறையில் நுழைய முடியாது' என தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
கடந்த காலத்தில், தி.மு.க., ஆட்சி நடந்த போது எம்.பி.பி.எஸ்., சீட் எப்படி ஏலம் விடப்பட்டது, எப்படி ஏழை எளியோர் பாதிக்கப்பட்டனர் என்பதை எல்லாம் தெரிந்திருந்தும், எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றன.நாடெங்கும், மருத்துவ படிப்பிற்காக மத்திய அரசு அமல்படுத்தியுள்ள, 'நீட்' தேர்வு பற்றிய சர்ச்சை, தமிழகத்தில் தான் அதிகமாக எழுந்துள்ளது.குறிப்பாக, தி.மு.க., போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தான், 'நீட் தேர்வு நடத்தவே கூடாது' என போராடுகின்றனர். அதனால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கடுமையாக குரல் கொடுத்து வருகின்றனர்.அகில இந்திய அளவில், எல்லா மாநிலங்களிலும், எல்லா அரசியல் கட்சிகளும், 'நீட்' தேர்வை ஆதரிக்கின்றன. தமிழகத்தில், எதிர்க்கட்சியான, தி.மு.க.,வும், அதன் தோழமை கட்சிகள் மட்டுமே, 'நீட்' தேர்வை எதிர்ப்பது, மக்களை ஏமாற்றத் தான்.

மக்கள் பாதுகாப்பை மாநில அரசும் உறுதிபடுத்தணும்!
மு.பெரியண்ணன், தலைமை ஆசிரியர் (பணி நிறைவு), கின்னியம்பாளையம், ஈரோடு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'அரசு விழாவுக்கு மட்டும் பேனர் வைக்கலாம்' என, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் பார்வையில், ஆபத்தை விளைவிப்பதில் பேனரும், கொடிக்கம்பமும் ஒன்று தான்; இவை இரண்டும், உடன் பிறவா சகோதரர்கள் போன்றவை.கடந்த காலங்களில், இந்த அளவுக்கு பொது நிதியை பாழாக்கி, தேர்தலில் வெற்றிக் கனியை இட்ட பேனரையும், கொடிக்கம்பத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவில்லை.'கிங் மேக்கர்' என, புகழப்பட்ட காமராசர், கக்கன் போன்றோரும், மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி, தங்கள் சுயலாபத்திற்காக பேனர்களை பயன்படுத்தியதில்லை.சமீபத்தில், பேனர் கொடிக் கம்பம் விழுந்து, நெடுஞ்சாலையில் சென்ற கோவையைச் சேர்ந்த பெண், விபத்தில் அடிபட்டு, ஒரு கால் அகற்றப்பட்டு வேதனையுடன் செய்தி வந்தது. அதற்கு முன், சென்னையில், மென்பொருள் இன்ஜினியரான பெண், பேனர் விழுந்து இறந்தார்.இத்தகைய துயர சம்பவங்கள், சாலையோரங்களில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், கட்சிகளை உரம் போட்டு, நாவல் மரம் போல வளர்த்து வருகின்றன. அதன் பலனை அனுபவிக்க, பேனரையும், கொடிக்கம்பத்தையும், தங்களுக்கு சாதகமான கருவியாக வைக்கின்றன.அதன் வாயிலாக, மக்கள் செல்வாக்கு பெற்று, ஆட்சியமைத்து, சிம்மாசனத்தில் அமர பயன்படுத்துகின்றனர். 'மக்களுக்கு எதிரான, எந்த செயலையும் அனுமதிக்க மாட்டோம்' என, தமிழக அரசு சார்பில், நீதிமன்றத்தில் கூறப்பட்டது; அது, வரவேற்கக்கூடியது தான்.'மக்கள் நலன் கருதி, பேனரையும், கொடிக்கம்பங்களையும் சாலையோரம் வைக்கக் கூடாது' என, மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். நெடுஞ்சாலை போக்குவரத்தில் மக்கள் பாதுகாப்பை, மாநில அரசும், உறுதி செய்ய வேண்டும்.
திறமையற்றோர்பணி பெற வாய்ப்புஅளிக்கக் கூடாது
எஸ்.பிரபாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய, தகுதி தேர்வு தாள் - 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் போட்டி தேர்வு நடத்தப்படும். காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, மதிப்பெண் கூடுதலாக பெறுவோருக்கு, பணியிட வாய்ப்பு கிடைக்கும்.அரசு உதவி பெறும் பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு, போட்டி தேர்வு இல்லை. தகுதித்தேர்வு தாள் - 2ல் தேர்ச்சியும், பள்ளி நிர்வாகத்தினரால் நிர்ணயம் செய்யப்படும் தொகைக்கு, உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணிக்கு வேலை கிடைக்கும்.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய, டி.ஆர்.பி., நடத்தும் போட்டி தேர்வில், காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, அதிக மதிப்பெண் பெற்றால் தான் பணி வாய்ப்பு கிடைக்கும்.ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு, அரசால் நடத்தப்படும் தகுதி தேர்வோ அல்லது போட்டி தேர்வோ கிடையாது.முதுகலை பட்டப்படிப்புடன், இளம்கலை கல்வியியல் பட்டமும், பள்ளி நிர்வாகத்தினர் நிர்ணயம் செய்யும் தொகையும் மட்டும் செலுத்தினால் போதும்; வேலை கிடைத்து விடும்.பெரும்பாலான அரசு உதவி பெறும் பள்ளிகளில், நிர்வாகத்தினர் பணம் பெற்று பணியிடங்கள் நிரப்பும்போது, நிர்வாகத்திற்குள் சண்டை, சச்சரவுகள் நடைபெறுகின்றன. இதனால், மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது.இதே, முதுகலை பட்டப்படிப்பும், இளம்கலை கல்வியியல் பட்டமும் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களே, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி, தேர்ச்சி பெற முடியாமல் போனது.அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, தமிழக அரசால் சம்பளம் கொடுக்கப்படுகிறது. டி.ஆர்.பி., வாயிலாக நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை, அரசே நிரப்ப வேண்டும்.தற்போது, அரசின் அனைத்து கல்வி உயர் பதவிகளுக்கும் தேர்வு முறை இருக்கிறது. அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மட்டும் தேர்வு இல்லாமல் இருப்பது, திறமையற்றோர் பணி பெற வாய்ப்பு உள்ளது; இது தவிர்க்கப்பட வேண்டும்.Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X