பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : நவ 29, 2019
Advertisement
 இதே நாளில் அன்று

நவம்பர் 29, 1989
மருதகாசி: திருச்சி மாவட்டம், மேலக்குடிகாடு கிராமத்தில், அய்யம்பெருமாள் உடையார் -- மிளகாயி அம்மாள் தம்பதிக்கு மகனாக, 1920 பிப்., 13ல் பிறந்தார். கும்பகோணம் அரசு கல்லுாரியில் உயர் கல்வி கற்றார். சிறு வயதிலேயே, கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார். 1949ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த, சார் மாயாவதி என்ற படத்திற்கு, முதல் பாடலை எழுதினார்.முன்னாள் முதல்வர் கருணாநிதி வசனத்தில், எம்.ஜி.ஆர்., நடித்த, மந்திரி குமாரி படத்தில், இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. சிவாஜி நடித்த, துாக்கு துாக்கி பட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. திரைப்பட பாடலாசிரியராக இருந்த இவர், 4,000 பாடல்களுக்கு மேல் எழுதினார். இவர் எழுதிய பாடல்கள், புத்தகங்கள், மே 2007ல், அரசுடைமை ஆக்கப்பட்டன. 1989 நவ., 29ல் காலமானார்.அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X