சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையை ஆக்கிரமித்து குப்பை: நகராட்சி வாகனங்கள் சிறைபிடிப்பு

Added : நவ 29, 2019
Share
Advertisement
கடலுார் : கடலுார் கம்மியம்பேட்டையில், சாலையை ஆக்கிரமித்து குப்பை கொட்ட வந்த நகராட்சி வாகனங்களை, பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் கம்மியம்பேட்டையில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர். நகராட்சி ஊழியர்கள் குப்பையை அதற்கென

கடலுார் : கடலுார் கம்மியம்பேட்டையில், சாலையை ஆக்கிரமித்து குப்பை கொட்ட வந்த நகராட்சி வாகனங்களை, பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலுார் கம்மியம்பேட்டையில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர். நகராட்சி ஊழியர்கள் குப்பையை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டாமல், சாலையை ஆக்கிரமித்து கொட்டுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், நவநீதம் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள், நேற்று காலை 10:00 மணிக்கு, குப்பை கொட்ட வந்த 10க்கும் மேற்பட்ட நகராட்சி வாகனங்களை திடீரென சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று, பொதுமக்கள் சிறைபிடித்த வாகனங்களை 12:00 மணிக்கு விடுவித்து போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X