பொது செய்தி

தமிழ்நாடு

அரிசி அட்டையாக மாற்ற இன்று கடைசி நாள்; 7 ஆயிரம் பேர் விண்ணப்பம் வழங்கல்

Added : நவ 29, 2019
Advertisement

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், சர்க்கரை அட்டைதாரர்கள், அவர்களது அட்டையை, அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

பொது வினியோகத்திட்டத்தின் கீழ் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருப்போர், அரிசி பெறக்கூடிய ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என, பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்து வந்தனர்.அதனை ஏற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 19 ம் தேதி சர்க்கரை ரேஷன் அட்டைகளை, அரிசி விருப்ப ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்திட உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், அரிசி விருப்ப ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை இணையதளம் (www.tnpds.gov.in.) மூலம் மற்றும் நேரடியாகவும் கொடுத்தும் மாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டத்தில் மொத்தம் அரிசி, சர்க்கரை ரேஷன் அட்டைகள் மற்றும் கவுரவ அட்டைகள், ஓ.ஏ.பி., அன்ன பூர்ணா திட்டம் ஆகியவை சேர்த்து மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் ரேஷன் அட்டைகள் உள்ளன. அவற்றில் 17, 375 கார்டுகள் சர்க்கரை அட்டைகளாக உள்ளன.இவற்றில் அரிசி கார்டுகளாக மாற்றுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதில் இருந்து, 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணைய தளத்தின் வழியாக வரப்பெற்றுள்ளன.இணையதளம் பல இடங்களில் சரிவர இயங்காததால், இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:சர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றிக் கொள்ள கடந்த 26ம் தேதி கடைசி நாள். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, முதல்வர் அறிவுரைப்படி, மேலும் மேலும் 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி இன்றுடன் (29ம் தேதி) காலக்கெடு முடிவடைகிறது. மேலும் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது.எனவே, சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்ய விரும்புவோர், இணைய தளம் மூலம், வட்ட அலுவலகங்கள் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளிலும் விண்ணப்பங்களை வழங்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X