சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை சாவில் சந்தேகம் போலீசில் மகள் புகார்

Added : நவ 29, 2019
Advertisement

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக மகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரிஷிவந்தியம் அடுத்த எடுத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் கோவிந்தன், 47; இவர், கடந்த 22ம் தேதி சின்னக்கொள்ளியூர் மதுபானக்கடைக்கு அருகில் இறந்து கிடந்தார். இது குறித்து அறிந்த அவரது குடும்பத்தினர், கோவிந்தன் உடலை மீட்டு மீட்டு இறுதிச் சடங்குகளை செய்தனர்.இந்நிலையில் கோவிந்தனை அதே கிராமத்தை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் ராஜேந்திரன், தங்கராசு மகன் ராமமூர்த்தி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் மது குடிப்பதற்காக சின்னக்கொள்ளியூருக்கு அழைத்து சென்றபோது இறந்ததாகவும்; அதனால், கோவிந்தன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகள் சபரிதேவி போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் ராஜேந்திரன், ராமமூர்த்தி, ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X