நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் செல்லும் வழியில் இருந்த புதர்கள், தினமலர் செய்தி எதிரொலியால், அகற்றப்பட்டது.
நடுவீரப்பட்டிலிருந்து சி.என்.பாளையம் வழியாக சாத்திப்பட்டு செல்லும் மெயின்ரோடு உள்ளது. இந்த சாலையில், ஊரின் வழிகாட்டி பலகை உள்ளது. இந்த வழிகாட்டி பலகை முழுவதும் மறைக்கும் வகையில், புதர் வளர்ந்து இருந்தது.இதனால் அந்த வழியாக வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கு ஊரின் பெயர் தெரியாத நிலை இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன் எதிரொலியாக சாலையை ஆக்கிரமித்து இருந்த புதர்கள் முழுமையாக அகற்றப்பட்டன.