தொரவியில் கைலாசநாதர் கருவறை ஸ்தாபன பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொரவியில் கைலாசநாதர் கருவறை ஸ்தாபன பூஜை

Added : நவ 29, 2019

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த தொரவி கோவிலில் கைலாசநாதர் கருவறை ஸ்தாபன பூஜை நடந்தது.

விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் திருப்பணி நடைபெற்று வருகிறது. நேற்று காலை கோவில் கருவறையில் மூலவர் கைலாசநாதரை பிரதிஷ்டை செய்ய கிரேன் மூலம் கருவறையில் வைக்கப்பட்டும், கருவறை வாசற்கால்கள் நிறுத்தப்பட்டன.பின்னர் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக சிவனடியார்கள் கல்யாணி அம்மாள், கலியபெருமாள் குழுவினர் திருவாசகம் பாடினர்.விழா ஏற்பாடுகளை தொரவி சுப்ரமணி, புதுச்சேரி கந்தன் நாராயணசாமி, ராதாகிருஷ்ணன், முரளிதரன், கண்ணன், முன்னாள் தலைவர் சங்கர், வழக்கறிஞர் சம்பத், ரவி, ஸ்தபதி கந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X