பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் வெங்காயம், சீனாவில் பன்றி இறைச்சி

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (9)
Advertisement
இந்தியாவில் வெங்காயம், சீனாவில் பன்றி இறைச்சி

புதுடில்லி: இந்தியாவில், வெங்காயம் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு போலவே, சீனாவில் பன்றி இறைச்சி விலை அபரிமிதமாக அதிகரித்துள்ளது, உலகின் வளரும் பொருளாதாரங்களை கொண்டுள்ள நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக, பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.





கடந்த சில வாரங்களாக, இந்தியாவில் வெங்காயம் விலை அதிகரித்து, கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக, 100 க்கு மேல் விற்பனையாகிறது. இது, சில வாரங்களுக்கு முன், 15 - 20 ரூபாயாக இருந்தது. வெங்காயம் விலை உயர்வு, இந்திய சமையலறையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது போலவே, பணவீக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என, பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
அதுபோல, அண்டை நாடான சீனாவில், வரலாறு காணாத வகையில், அம்மக்களின் முக்கிய உணவான பன்றி இறைச்சி விலை உயர்ந்துள்ளது.பறவைக் காய்ச்சல் நோய் பரவுகிறது என்பதற்காக, சில மாதங்களுக்கு முன், லட்சக்கணக்கான பன்றிகளை, அந்நாடு கொன்று குவித்தது; அதன் விளைவை, இப்போது அனுபவித்து வருகிறது.
இதுபோலவே, துருக்கி, ஆப்ரிக்கா கண்டத்தின் தென் பகுதியில் உள்ள நாடுகளில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் கண்டு, அந்நாட்டு பொருளாதாரங்களை பாதித்து வருவதாக, பொருளாதார வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
29-நவ-201916:54:43 IST Report Abuse
Sampath Kumar வெங்காயம் மட்டுமா? உருளை கிழங்கு இந்த இரண்டும் தான் இந்தியா அரசியலலில் ஹீரோக்கள் இது மறைமுக அரசியில் விளையாட்டு
Rate this:
Share this comment
Cancel
29-நவ-201914:56:15 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் //பறவைக் காய்ச்சல் நோய் பரவுகிறது என்பதற்காக, சில மாதங்களுக்கு முன், லட்சக்கணக்கான பன்றிகளை, அந்நாடு கொன்று குவித்தது// அது பறவை காய்ச்சல் அல்ல பன்றி காய்ச்சல்.
Rate this:
Share this comment
Cancel
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
29-நவ-201910:15:49 IST Report Abuse
Dinesh Pandian போன வாரம் ஹைதெராபாத் பக்கத்தில் ஒரு கிராமத்திலே கிலோ நாற்பது ரூபாய்க்கு விவசாயி ஒருவரிடம் 5 கிலோ வணங்கினேன் .ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார் அவர் , ஏனென்றால் மொத்த வியாபாரி 30 தான் கொடுக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X