சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: உலகத் தமிழர்களின் வருங்கால திட்டம் என்ன என்பதே, தற்போது நாம் தீர்மானிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். ஐ.நா., சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் கவனத்தை, நம்மை நோக்கி ஈர்க்க வேண்டும். தமிழீழத்தை வென்றெடுக்கும் வகையில், அரசியல் கொள்கைகளை வரையறுக்க வேண்டும். 'டவுட்' தனபாலு: விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில், உங்கள்
 'டவுட்' தனபாலு

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: உலகத் தமிழர்களின் வருங்கால திட்டம் என்ன என்பதே, தற்போது நாம் தீர்மானிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். ஐ.நா., சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் கவனத்தை, நம்மை நோக்கி ஈர்க்க வேண்டும். தமிழீழத்தை வென்றெடுக்கும் வகையில், அரசியல் கொள்கைகளை வரையறுக்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில், உங்கள் கட்சி யாருடன் கூட்டு; இரண்டாண்டுகளில் வரவுள்ள சட்டசபை தேர்தலில், எந்த கூட்டணியில் இடம் என்பதை முதலில், உறுதியாக முடிவு செய்யுங்கள். அதன் பிறகு, ஐ.நா., சபை மற்றும் தமிழீழம் பற்றி யோசித்துக் கொள்ளலாம். வரவர நீங்கள், உங்கள் கட்சியினருக்கு புரியாத விஷயங்களை எல்லாம் கூறி, அவர்களை குழப்புகிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.l
தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: பிறந்த நாள் என்பது, வாழ்வின் இன்னுமொரு நாள் அவ்வளவு தான். ஆனால், அதை மறக்க முடியாத, சிறந்த நாளாக மாற்றுவது, மற்றவர்களின் வாழ்த்தும், அன்பும் தான். அந்த வகையில், என் பிறந்த நாளை, மறக்க முடியாத நாளாக மாற்றிய அனைவருக்கும் நன்றி.
'டவுட்' தனபாலு: எதுவாக இருந்தாலும், இந்த ஆண்டின் பிறந்த நாள், உங்களுக்கு மறக்க முடியாததாகவே இருந்திருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை. ஏனெனில், தி.மு.க.,வின் முக்கிய பிரிவான, இளைஞர் அணியின் தலைவராக, இந்த ஆண்டு நீங்கள், 'மகுடம்' சூட்டப்பட்டுள்ளீர்கள் அல்லவா... அதனால், உங்களுக்கு இந்த பிறந்த நாள், முக்கியமானது தான் என்பதை யாரும், 'டவுட்' கொள்ளவே முடியாது.
தமிழக சட்ட அமைச்சர் சண்முகம்: ஆட்சியில், தி.மு.க., இருந்த போது, வெறுமனே திட்டங்களை மட்டும் அறிவிக்கும்; அதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காது. ஆனால், தமிழக முதல்வர் இ.பி.எஸ்., கேட்காமலேயே கொடுப்பவர். திட்டங்களை அறிவித்த உடன், அரசாணையும் வெளியிட்டு, திட்டத்திற்கான இடத்தையும் தேர்வு செய்து வழங்கி விடுவார்.
'டவுட்' தனபாலு: சமீப காலமாக, முதல்வரையும், துணை முதல்வரையும், அமைச்சர்கள் போற்றி, பாடுகின்றனர். நீங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டம் துவக்க விழாவில், முதல்வரை இவ்வாறு பாராட்டியுள்ளீர்கள். எல்லா அமைச்சர்களும் சொல்லி வைத்தது போல போற்றுகிறீர்களே... இதன் பின்னணியில், சமீபத்தில் கூடிய, பொதுக்குழு உத்தரவு இருக்குமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
29-நவ-201901:09:05 IST Report Abuse
S.V.SRINIVASAN இவரு உலக தமிழர்களின் வருங்கால திட்டம் அது இது என்று ஐ நா சபையும் வம்புக்கிழுத்து அவரும் குழம்பி அவரது தொண்டர்களையும் (?) ஏன் குழப்புகிறார். தமிழ் நாட்டை தவிர மற்ற நாட்டில் வாழும் தமிழர்கள் அவர்கள் சம்பாதித்து கொண்டு அவர்கள் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுடைய வருங்கால திட்டத்தை அவர்கள் நன்றாகவே அமைத்து கொள்வார்கள். இவர் வேண்டாத கவலை எல்லாம் பட வேண்டாம். இவரை தேர்ந்தெடுத்த சிதம்பரம் தொகுதி மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தால் அதுவே போதுமானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X