சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை கண்டிப்பு; மகள் விஷம் குடித்து தற்கொலை

Added : நவ 29, 2019
Advertisement

பெண்ணாடம் : தந்தை கண்டித்ததால், மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார், பெண்ணாடம் அடுத்த நரசிங்கமங்கலத்தை சேர்ந்தவர் வீரபாண்டியன். கூலித்தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி, 15. பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்தார். வீரபாண்டியன் சபரிமலை கோவிலுக்கு செல்ல மாலை அணிந்த நிலையில், கடந்த 26ம் தேதி அருகிலுள்ள உறவினர் ஒருவர் இறந்துள்ளார். இதற்காக வீட்டை சுத்தம் செய்யுமாறு மகள் புவனேஸ்வரியிடம் கூறிவிட்டு வீரபாண்டியன் வெளியே சென்றார்.திரும்பி வந்த போது, வீடு சுத்தம் செய்யப்படாமல் இருந்ததை பார்த்து மகளை கண்டித்தார். இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார். இதுகுறித்து, பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X