பொது செய்தி

தமிழ்நாடு

கவர்னர் இன்று இரவு சிதம்பரம் வருகை

Added : நவ 29, 2019
Advertisement

சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, கவர்னர் பன்வாரிலால் புரோகித், இன்று சிதம்பரம் வருகிறார்.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 83வது பட்டமளிப்பு விழா, நாளை (30ம் தேதி) காலை 10.30 மணிக்கு, சாஸ்திரி அரங்கில் நடக்கிறது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார்.சிறப்பு விருந்தினராக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பங்கேற்கிறார். சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சத்தியநாராயண மூர்த்தி, உரையாற்றுகிறார். விழா ஏற்பாடுகளை துணைவேந்தர் முருகேசன் தலைமையில், பதிவாளர் கிருஷ்ணமோகன், தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரி செல்வநாராயணன் மற்றும் பேராசிரியர்கள் குழுவினர் செய்கின்றனர்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித், இன்று (29ம் தேதி) மாலை 4 மணிக்கு, சென்னையில் இருந்து செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சிதம்பரத்திற்கு இரவு 8.30 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுஸ்சில் தங்குகிறார். காலை 7:00 மணிக்கு நடராஜர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழா முதல்கட்ட நிழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 10.30 மணிக்கு சாஸ்திரி அரங்கில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். மதியம் உணவிற்கு பின், நாகப்பட்டிணம் மீன்வள கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இரவு ரயில் மூலம் சென்னை செல்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X