பொது செய்தி

தமிழ்நாடு

தெய்வானை மகளிர் கல்லூரியில் ஆட்சிமன்ற குழுக் கூட்டம்

Added : நவ 29, 2019
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் ஆட்சிமன்ற குழுக் கூட்டம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் அருணாகுமாரி வரவேற்றார். சென்னை பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் துறை முன்னாள் துறைத் தலைவர் நிரஞ்சலிதேவி, கல்லுாரிக்கல்வி வட்டார இணை இயக்குனர் எழிலன், திருவள்ளுவர் பல்கலைக்கழக வேதியியல் துறைத் தலைவர் சையத் சபி, திருச்சி பி.ஐ.எம்., இணை பேராசிரியர் ஜெயகிருஷ்ணா ஆகியோர் ஆட்சி மன்றக்குழுவில் பங்கேற்றனர்.கல்லுாரி தாளாளர் சாமிக்கண்ணு, செயலர் செந்தில்குமார் கல்லுாரிக்கு தேசிய தரச்சான்று அங்கீகாரம் பெறவும், டி.எஸ்.டி., பிஸ்ட் ஆய்வகத்தை நிறுவுதல் மற்றும் மாணவிகளுக்கு உலகளாவிய கல்வியை ஊக்குவித்தில் ஆகியவற்றிற்கு பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரின் பங்களிப்புகள் குறித்து பேசினர்.இ.எஸ்., கல்விக்குழும பதிவாளர் சவுந்தரராஜன், கல்லுாரியின் சிறப்புகள் குறித்து பேசினார். முதல்வர் அருணகுமாரி, கல்லுாரியில் துவங்கியுள்ள புதிய பாடப்பிரிவுகள், புத்தாக்க செயல்பாடுகள், பேராசிரியர் பணியமர்த்த விதிகள் ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை விவரித்தார்.மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை பெற்று தருதல், ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துதல், சிறப்பான தன்னாட்சி தொடர்பாக ஆட்சி மன்றக்குழுவினர் தங்களின் ஆலோசனைகளை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X