பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டு பண்ணைய திட்டத்தில் சேர வேண்டும்; விவசாயிகளுக்கு கலெக்டர் 'அட்வைஸ்'

Added : நவ 29, 2019
Advertisement

கடலுார் : கூட்டாக சேர்ந்து பாடுபட்டால், எதிர்காலத்தில் உலகம் விவசாயிகள் கைகளில் இருக்கும் என்பதால், கூட்டு பண்ணைய திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என, கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

கடலுார் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில், மாவட்ட வேளாண் துறை சார்பில், கூட்டு பண்ணையத்திட்ட உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளுக்கு நடந்த, ஒரு நாள் பயிற்சி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார். வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) ரமேஷ் வரவேற்றார். அட்மா திட்ட இயக்குநர் முருகன் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகவன், மாநில வேளாண்மை கூட்டு பண்ணைத்திட்ட ஆலோசகர் வடிவேல், செயற்பொறியாளர் பழனிவேல், உலகம்மை, முருகக்கனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வேளாண் துணை இயக்குநர் வேல்விழி நன்றி கூறினார்.விழாவில், கலெக்டர் அன்புச்செல்வன் பேசுகையில், 'விவசாயிகள் சேர்ந்து அதிக பரப்பில் ஒரே நேரத்தில் பயிர் செய்யவேண்டும். விளை பெருட்களை தரம் பிரிந்து அதிகளவு தயார் செய்தால் மட்டுமே தொழிற் சாலைகளோடும், நிறுவனங்களோடும் தொடர்பு வைத்து நேரடி வணிகத்தில் ஈடுபட முடியும்.இதை ஊக்குவிக்க மத்திய அரசு கம்பெனி சட்டத்தில், திருத்தம் செய்து, உற்பத்தியாளர் கம்பெனி என்ற புதிய அமைப்பினை உருவாக்க அனுமதித்துள்ளது.

உற்பத்தி செய்பவர்களை வணிகர்களாக மாற்றி, நுகர்வோரிடம் இருந்து பெறும் தொகையில், 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.எனவே விவசாயிகள் கூட்டுபண்ணைய திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும். இத்திட்டத்தில் 2019-20 ம் ஆண்டில் வேளாண்மை துறை மூலம், 62 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், தோட்டக்கலைத்துறை சார்பில் 25 குழுக்களும் துவங்கப்பட்டு, 4.35 கோடி ரூபாய் மதிப்பில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.சேர்ந்து பாடுபட்டால் எதிர்காலத்தில் உலகம் விவசாயிகள் கைகளில் இருக்கும். எனவே அனைத்து விவசாயிகளும் கூட்டுப்பண்ணைய திட்டத்தில் சேர்ந்து பயன்பெறவேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X