குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

Added : நவ 29, 2019
Advertisement

கடலுார் : கடலுார், வன்னியர்பாளையத்தில் வீடுகளை சூழ்ந்து மழைநீர் நிற்பதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கடலுார், வண்டிப்பாளையம், செம்மண்டலம், புதுப்பாளையம், வண்ணாரப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.குறிப்பாக, வன்னியர்பாளையம் தங்கவதி நகரில் வீடுகளை சூழ்ந்து மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கழிவுநீரும் சேர்ந்து கலப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது.இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர். வாய்க்காலை சுற்றி செடிகள், குப்பைகள் அதிகளவில் குவிந்து காணப்படுகிறது. இதனை நகராட்சி ஊழியர்கள் அகற்றாததால், மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது.இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, நகராட்சி அதிகாரிகள், மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X