பொது செய்தி

தமிழ்நாடு

அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
சிதம்பரம் : கார்த்திகை தீபத்தையொட்டி குமாரமங்கலத்தில்,அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கார்த்திகை தீப திருவிழா, வரும் 10ம் தேதி நடக்கிறது. அன்று மாலை வீடுகளில் அகல் விளக்கேற்றி, தீப திருவிழாவை கொண்டாடுவர். அகல் விளக்கு தயாரிக்கும் பணியை, மண் பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் தீவிரபடுத்தியுள்ளனர்.சிதம்பரம் பகுதியில் குமாரமங்கலம், வல்லம்படுகை போன்ற

சிதம்பரம் : கார்த்திகை தீபத்தையொட்டி குமாரமங்கலத்தில்,அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கார்த்திகை தீப திருவிழா, வரும் 10ம் தேதி நடக்கிறது. அன்று மாலை வீடுகளில் அகல் விளக்கேற்றி, தீப திருவிழாவை கொண்டாடுவர். அகல் விளக்கு தயாரிக்கும் பணியை, மண் பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் தீவிரபடுத்தியுள்ளனர்.

சிதம்பரம் பகுதியில் குமாரமங்கலம், வல்லம்படுகை போன்ற பகுதிகளில் இருக்கும் தொழிலாளர்கள் அகல் விளக்கு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தயாரிக்கப்படும் அகல் விளக்குகளை, சிதம்பரம், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.தற்போது தேங்காய், அன்னப்பறவை, பாவை விளக்கு என பல வடிவங்களில் செராமிக்கில் விளக்கு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. களிமண் அகல் விளக்கு தயாரிப்பு குறைந்துள்ளதால், செராமிக் அகல் விளக்கு விற்பனை அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X