மாநில டென்னிஸில் ஆட்டம் காட்டிய ஜெய்சரண்

Added : நவ 29, 2019
Share
Advertisement
கோவை:மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய,14 மற்றும், 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில், ஜெய் சரண் முதலிடத்தை தட்டிச் சென்றார்.காளப்பட்டி, 'லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப்' சார்பில், மாநில அளவிலான 'நான் ரேங்கிங்' டென்னிஸ் போட்டி நடந்தது. வீரர்களுக்கான, 10 வயதுக்கு உட்பட்ட 'ரெட் பால்' மினி கோர்ட், 8 வயது, 10, 12, 14, 16, ஆண்கள் என, ஏழு பிரிவுகளில் மாநில டென்னிஸ்

கோவை:மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய,14 மற்றும், 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில், ஜெய் சரண் முதலிடத்தை தட்டிச் சென்றார்.காளப்பட்டி, 'லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப்' சார்பில், மாநில அளவிலான 'நான் ரேங்கிங்' டென்னிஸ் போட்டி நடந்தது. வீரர்களுக்கான, 10 வயதுக்கு உட்பட்ட 'ரெட் பால்' மினி கோர்ட், 8 வயது, 10, 12, 14, 16, ஆண்கள் என, ஏழு பிரிவுகளில் மாநில டென்னிஸ் போட்டிகள் நடந்தன.கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, ஊட்டி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.* வீரர்களுக்கான, 10 வயதுக்கு உட்பட்ட (ரெட்பால் மினி கோர்ட்) இறுதி போட்டியில், நரேன் மித்ரன், 11-5 என்ற புள்ளிக்கணக்கில், பாதிலை வென்றார்.* 8 வயதுக்கு உட்பட்ட பிரிவில், இசான்சுதர்சன், 5-0 என்ற புள்ளிக்கணக்கில், அணிலாகுப்பியாவையும்; 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில், பவிஷ்ணு, 7-5 என்ற புள்ளிக்கணக்கில், ஏலன்னையும்; 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில், கிர்த்திக், 7-6 என்ற புள்ளிக்கணக்கில், ரோகித்யையும் வென்றனர்.* 14 மற்றும், 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில், ஜெய்சரண், 6-1, 6-4 என்ற புள்ளிக்கணக்கில், பாலசூர்யாவையும்; ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், வசந்த், 6-2 என்ற புள்ளிக்கணக்கில், பாலசூர்யாவையும் வென்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X