டேபிள் டென்னிஸ் நரேஷ் முதலிடம்

Added : நவ 29, 2019
Advertisement

கோவை:மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, சப்- ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் நரேஷ் முதலிடம் பிடித்து அசத்தினார்.கோவை மாவட்ட டேபிள் டென்னிஸ் அசோசியேஷன் சார்பில், நான்காம் கட்ட மாவட்ட அளவிலான 'ரேங்கிங்' போட்டி, பீளமேடு பாரதி காலனி பகுதியில் நடந்தது.'மினி கேடட்', 'கேடட்', சப்- ஜூனியர், ஜூனியர், யூத் பாய்ஸ், ஆண் மற்றும் பெண்கள் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் இருந்து, 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.'மினி கேடட்' பிரிவு ரேஜிஸ், 3-1 என்ற செட் கணக்கில், ரேயான்னையும்; 'கேடட்' பிரிவில், விஷ்ணு, 3-1 என்ற செட் கணக்கில், இலக்கியானையும்; சப்- ஜூனியர் பிரிவில், நரேஷ், 3-1 என்ற செட் கணக்கில், விஷ்ணுவையும்; ஜூனியர் பிரிவில், நரேஷ், 3-1 என்ற செட் கணக்கில், அபிஷேக்கையும்; 'யூத் பாய்ஸ்' பிரிவில், லட்சுமணன், 3-1 என்ற செட் கணக்கில், ஸ்ரீதரையும்; ஆண்கள் பிரிவில், அருண் ரேஷன், 3-1 என்ற செட் கணக்கில், சங்கரையும் வென்றார்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. எட்டு சுற்றுகளாக நடக்கும் 'ரேங்கிங்' போட்டியில், அதிக புள்ளிகள் பெறும் வீரர், வீராங்கனைகள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X