3வது டிவிஷன் கிரிக்கெட் ஆர்.கே.எஸ்., அபாரம்

Added : நவ 29, 2019
Advertisement

கோவை:மாவட்ட அளவிலான மூன்றாவதுடிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், ஆர்.கே.எஸ்., கல்விநிலையம் ஐ.சி.சி., அணி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டுக்கான,'தாமோதரன் அறக்கட்டளை டிராபி'க்கான மூன்றாவது டிவிஷன்'லீக்' போட்டி,கோவையில் பல்வேறு பகுதிகளில் நடந்தது.அவிநாசி ரோடு, பி.எஸ்.ஜி., மருத்துவகல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தபோட்டியில், கோவை டஸ்கர்ஸ் அணி, ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் ஐ.சி.சி., அணிகள் மோதின.முதலில் விளையாடிய,கோவை டஸ்கர்ஸ் அணி, 49.3 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 146 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய ஆர்.கே.எஸ்., அணி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 28.3 ஓவரில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 150 ரன் எடுத்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X