கோவை:''வலிப்பு நோய்க்கு தாமதிக்காமல் சிகிச்சை செய்யாவிட்டால், முடமாகும் அபாயம் ஏற்படும்,'' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை கதிர்வீச்சியல் துறை தலைவர் மாத்யூ செரியன் கூறினார்.இதுகுறித்து, நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:மூளைப்பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் வீக்கம் அல்லது வெடிப்பு ஏற்பட்டால், வலிப்பு ஏற்படும். மூளைப்பகுதியில் ரத்தம் தடைபடுவதால், பாதிப்பு ஏற்படும் பகுதியில் உள்ள உறுப்பு பாதிப்பு ஏற்படும். இதன் அறிகுறியாக வாய் கோணுதல், பேச்சு குளறுதல், கை, கால்கள் செயலிழத்தல் போன்றவை ஏற்படும். இறப்பும் நேரிடலாம். எனவே, தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம்.கோவை மெடிக்கல் சென்டரில், இதற்கான வசதிகள் உள்ளன. புகை பிடிக்கும் இளைஞர்கள், உடற்பயிற்சி இல்லாமல் மந்தநிலையில் உள்ள இளைஞர்கள், கர்ப்பப்பை முன்னதாகவே அகற்றிக் கொள்ளும் பெண்கள், புகைபிடிக்கும் பழக்கம் உள்ள பெண்கள், மாதவிடாய் முன்பே நிறுத்தும் பெண்கள் போன்றோருக்கும், வலிப்பு வர வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார். டாக்டர்கள் பங்கஜ்மேத்தா, ஸ்ரீராம், சந்தோஷ் உடனிருந்தனர்.