சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.6,000 உதவி தொகை பெற உழவன் செயலியில் பதியலாம்

Added : நவ 29, 2019
Advertisement

தொண்டாமுத்துார், நவ. 29-

தமிழக அரசின், 'உழவன் செயலி' மூலம், பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில், நேரடியாக பயனாளிகள் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.'விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்' என, கடந்த, பிப்., மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதில் இணைய, வி.ஏ.ஓ.,க்களிடம் விவசாயிகள் விண்ணப்பம் அளித்து வந்தனர். தற்போது, இம்முறையை வேளாண் துறை எளிமையாக்கியுள்ளது. 'உழவன் செயலி' மூலம், நேரடியாக, பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில், பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.அச்செயலியில், இடுபொருள் முன்பதிவு என்பதை தேர்வு செய்து, பிரதம மந்திரியின் கிசான் சம்மான் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில், புதிய விண்ணப்பம் என்பதை தேர்வு செய்து, பெயர், முகவரி, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் உள்ளீடு செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முறைக்கான, விடியோ பதிவும் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள், இனி, அலுவலகங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X