சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

உங்கள் கட்சியின், ஹிந்துத்வா கொள்கைகளை எதிர்த்தால், அந்த பல்கலையை உடனே மூடி விட வேண்டுமா... அப்படியானால், நாடு முழுவதும் உள்ள பல்கலைகளை மூட வேண்டி வருமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முழுக்க, இடதுசாரிகள் மற்றும் சமூக விரோத சக்திகளின் கூடாரமாக மாறி விட்டது. அந்த பல்கலைக் கழகத்தை, இரண்டு ஆண்டுகளுக்காவது மூடினால் தான், அங்குள்ள சமூக விரோத சக்திகளை அடக்க முடியும்.


'எதிர்க்கட்சிகள் அனைத்தும் இப்படியே சொல்லி, தி.மு.க.,வை துாண்டி விட்டு, நீதிமன்றத்தில் தடை பெற்று விடுவீர்கள் போல இருக்கிறதே... ' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: தமிழகத்தை ஆளும், அ.தி.மு.க., அரசு, உள்ளாட்சி தேர்தலில், சில பதவிகளுக்கு மறைமுக தேர்தலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், யாராவது நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்து, தேர்தலை நிறுத்த மாட்டார்களா என நினைக்கிறது. காரணம், அந்த கட்சிக்கு தோல்வி பயம் உள்ளது.

'நோய் வரும் வரை, பொதுமக்கள் எங்கே, தங்கள் உடல் நலத்தின் மீது அக்கறை கொள்கின்றனர்...' என, கவலைப்படத் தோன்றும் வகையில், நெல்லை மருத்துவக் கல்லுாரி நெஞ்சக நோய் பிரிவு டாக்டர் மதன் பேச்சு: உலக அளவில், ஆள்கொல்லி நோய்களாக கருதப்படும் மாரடைப்பு, நிமோனியா காய்ச்சலுக்கு அடுத்தபடியாக, நுரையீரல் அடைப்பு நோய் மாறியுள்ளது. இதற்கு காரணம், புகை பிடித்தல் மற்றும் சுற்றுச்சூழலில் நிலவும் மாசு தான். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
'தமிழகத்தில் இப்போது நடப்பது, 'வெங்காய அரசியல்' என்பது, எதிரணியினரின் தொடர்ச்சியான அறிக்கை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை: வெங்காயம் விலை உயர்வு, அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, ரேஷன் கடைகள் மூலம் போதுமான அளவு வெங்காயத்தை விற்பனை செய்ய வேண்டும்.

'எல்லா மானியங்களும், வங்கிக் கணக்கில் தான் வரவு வைக்கப்படுகின்றன. அந்த வகையில், இதுவும் இருக்கலாம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., மாநில தலைவர் வாசன் அறிக்கை: மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் விலையில், மானியத்தை கழித்து தான் இதுவரை மீனவர்கள் டீசல் பெற்று வந்தனர். இப்போது, 'ஸ்மார்ட் கார்டு' என்ற புதிய முறையில், முழு பணமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, மானியம், மீனவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை, மீனவர்களுக்கு நன்மை பயக்காது
.'ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ காதுக்கு கேட்டு விடப் போகிறது... சற்று மெதுவாக பேசுங்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில், பாறை மீத்தேன் திட்டத்திற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது, பா.ம.க., தான். இப்போது, அந்தத் திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக, மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை, தமிழக உழவர்கள் கொண்டாட வேண்டும்.
'

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X