மும்முறை தாண்டி சாதித்த சந்தீப் | Dinamalar

மும்முறை தாண்டி சாதித்த சந்தீப்

Added : நவ 29, 2019

கோவை:கோவை சகோதயா தடகள போட்டி, மும்முறை தாண்டுதலில் சிறப்பாக செயல்பட்ட சந்தீப் நாராயணன் முதலிடம் பிடித்து அசத்தினார்.கோவை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டி, பாரதியார் பல்கலை மைதானத்தில் நடந்தது. 38 பள்ளிகளில் இருந்து, 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1,500மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.நேற்று நடந்த போட்டி முடிவு:மாணவர்கள் பிரிவு, 19 வயதுக்கு உட்பட்ட மும்முறை தாண்டுதலில் சுபஜோத், ஜெயதீப், சியாம் கேசவன்; நீளம் தாண்டுதலில் ராகுல், சுஜித், கோகுல்நாத்; 17 வயதுக்கு உட்பட்ட மும்முறை தாண்டுதலில் சந்தீப் நாராயணன், லிவின் நோவா, முகேஷ்; குண்டு எறிதலில் ராகவேந்திரா ராஜா, பரூக், சிபி வர்ஷன்; 14 வயதுக்கு உட்பட்ட 100மீ., கிசாந்த், பிரணவ் ராகவேந்திரா, அபி; உயரம் தாண்டுதலில் ஷ்யாம், விமல்ராஜ், ஜடோன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.மாணவியர் பிரிவு, 19 வயதுக்கு உட்பட்ட ஈட்டி எறிதலில் மிர்துளா, சஜூன்யா, வள்ளி மீனா; 800மீ., கவியா, அக் ஷயா, வேதசுருதி; 17 வயதுக்கு உட்பட்ட குண்டு எறிதலில் பகுலிசா, ரேஷ்மிதா, மிர்துளா ஜெய்ஸ்ரீ; 800மீ., அருனிதா, சம்யுத்தா, அன்னரியா; 14 வயதுக்கு உட்பட்ட 100மீ., தக் ஷிதா, இனியா, ஜெரிக்கா; வட்டு எறிதலில் ரிவாலின், சும்ரித்தா, பிரவீனா ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X