சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலில் மூழ்கிய தம்பி மாயம்

Added : நவ 29, 2019
Advertisement

நாகப்பட்டினம் :நாகை கடலில் மீன்பிடித்து விட்டு திரும்பும் போது, படகு கவிழ்ந்ததால் அண்ணன் கண் முன் கடலில் மூழ்கிய தம்பியை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாகை,கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த வேலாயுதம்,45 என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முகிந்தன்,20,முருகவேல்,18 நேற்று அதிகாலை கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.மதியம் மீன்பிடித்து விட்டு திரும்பும் போது, கடுவையாற்றின் முகத்துவாரம் அருகே கடல் சீற்றத்தில் சிக்கிய பைபர் படகு கவிழ்ந்தது. இதில் கடலில் துாக்கியெறியப்பட்ட மூவரும் தத்தளித்தனர். அப்பகுதியே வந்த சாமந்தான் பேட்டை மீனவர்கள், வேலாயுதம், முகிந்தனை காப்பாற்றி முருகவேலை காப்பாற்ற முயற்சித்தனர். அலைகளின் சீற்றம் அதிகமிருந்ததால், முருகவேலை மீட்க முடியாமல்,துறைமுகத்தில் முகாமிட்டுள்ள கடற்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து சென்ற கடற்படையினர் முருகவேலை மீட்க முயற்சித்தும் முடியாததால் கரை திரும்பினர். இதையடுத்து கீச்சாங்குப்பம் மீனவர்கள் படகில் சென்று மாயமான மீனவர் முருகவேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X