பொது செய்தி

இந்தியா

'ஸ்பைக் எல்.ஆர்.,'ஏவுகணை சோதனை வெற்றி

Added : நவ 29, 2019
Advertisement



புதுடில்லி :இந்திய ராணுவம், நேற்று,'ஸ்பைக் எல்.ஆர்.,' பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் இரு வகை, ஸ்பைக் எல்.ஆர்., ஏவுகணைகள், அண்மையில், ராணுவத்தில் சேர்க்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம், மத்திய பிரதேச மாநிலம், மோவில் உள்ள ராணுவ மையத்தில், இந்திய ராணுவ தளபதி, பிபின் ராவத் தலைமையில், இந்த ஏவுகணைகளின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்தைச் சேர்ந்த, ஸ்பைக் எல்.ஆர்., ஏவுகணை, 4.கி.மீ., தொலைவில் உள்ள, ராணுவ வாகனங்கள், பீரங்கிகள் ஆகியவற்றை துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
ஏவுவோரின் கட்டளைக்கு ஏற்ப, நடுவழியில், இலக்கை மாற்றி அழிக்க கூடியவை. பகல், இரவு என, இரு காலங்களிலும், பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்ப வசதியும் உள்ளது.
இந்த ஏவுகணைகள், ராணுவத்தில் சேர்க்கப்பட்ட பின், வீரர்களுக்கு அவற்றை பயன்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
போர் ஆயுதங்கள் கொள்முதல்
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் தலைமையிலான, பாதுகாப்பு கொள்முதல் குழு கூட்டம், நேற்று, டில்லியில் நடைபெற்றது. இதில், இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை கொள்முதல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து, இக்குழு, 22,800 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் ஆயுதங்களை கொள்முதல் செய்ய, ஒப்புதல் வழங்கியது. அத்துடன், நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் விமானம் வாங்கவும் அனுமதி அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X