முக்கிய புள்ளிகளை மயக்கி, 'பிளாக் மெயில்' டிவி நடிகைகள் உட்பட, 9 பேர் கும்பல் கைது

Added : நவ 29, 2019
Advertisement

பெங்களூரு :செல்வாக்குமிக்க முக்கிய புள்ளிகளை மயக்கி, 'பிளாக் மெயில்' செய்து, பணம் பறிக்கும், 'ஹனி டிராப்' கும்பலில் சின்னத்திரை நடிகைகளுக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.

இளம் பெண்களை வைத்து, பெரும்புள்ளிகளை மயக்கி, ஆபாச போட்டோ, 'வீடியோ' எடுத்து மிரட்டி பணம் பறித்த, 'ஹனி டிராப்' கும்பல், மத்திய பிரதேசத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது, இதே மாதிரியான கும்பல், கர்நாடகத்திலும் தங்கள் கை வரிசையை காட்டி வருகிறது.

வட கர்நாடகாவை சேர்ந்த, தேசிய கட்சியொன்றின் எம்.எல்.ஏ., ஒருவர், இக்கும்பலின் வலையில் சிக்கினார். இவரிடம், 10 கோடி ரூபாய் கேட்டு, அக்கும்பல் மிரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஹனி டிராப் தொடர்பாக, இரண்டு சின்னத்திரை நடிகைகள் உட்பட, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்; மேலும் நால்வர் தலைமறைவாக உள்ளனர்.

இது போல, யாராவது மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்திருந்தால், தைரியமாக முன் வந்து புகார் செய்யலாம்; இவர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என, சி.சி.பி., போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X