பொது செய்தி

தமிழ்நாடு

சமூக வலைதளங்களில் உணர்ச்சி பொங்கும் பதிவு

Added : நவ 29, 2019
Advertisement

ராணிப்பேட்டை, :ராணிப்பேட்டை, புதிய மாவட்டமாக துவக்கப்பட்டதால், சமூக வலைதளங்களில் உணர்ச்சி பொங்கும் பதிவை, அப்பகுதி மக்கள் வெளியிட்டுள்ளனர்.
அதில், வீரம் விளைந்த வேலுார் மாவட்டத்தில் இருந்து விடை பெறுகிறோம், இன்றுடன் தாய் வீட்டில் இருந்து, நாங்கள் தனி குடித்தனம் செல்கிறோம். கோட்டை மாவட்டக்காரர்களாக இருந்த நாங்கள், இனி பேட்டை மாவட்டக்காரர்களாக மாறுகிறோம். முன்பு ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டமாக, (வேலுார், திருவண்ணாமலை) உன்னுடன் பயணித்தோம். பின்னர், 1989ல் இருந்து வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டமாக இருந்தோம். 1996ல் இருந்து வேலுார் மாவட்டமாக மாறி, இனிதே பயணித்தோம். 2019 நவ., 28 முதல் புதிய ராணிப்பேட்டை மாவட்டமாக உதயமாகிறோம். எங்கள் தாய் மாவட்டமாக, வேலுார் மாவட்டத்தை நன்றியுடன், புதிய ராணிப்பேட்டை மாவட்டம் வணங்கி, இனிதே தன் தனி குடித்தனத்தை ஆரம்பிக்கிறோம். வாழ்க வேலுார் மாவட்டம், வளர்க, ராணிப்பேட்டை மாவட்டம் என, அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X