பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியின் 'தந்தை' பிறந்தநாள் 'கொடை'யில் அமர்க்களம்

Added : நவ 29, 2019
Advertisement



கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நட்சத்திர ஏரியை கட்டமைத்த சர் வீ ெஹன்றி லெவிஞ்ச்சின் 200 வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த ஏரியை 1864 ல் அப்போதைய மதுரை கலெக்டர் சர் வீ ெஹன்றி லெவிஞ்ச் உருவாக்கினார். அவரது நினைவை போற்றும் விதமாக சுற்றுலாத்துறை, நகராட்சி, தன்னார்வ அமைப்பு சார்பில் பிறந்த நாள் விழா நடந்தது.
அயர்லாந்தில் இருந்து வந்த அவரது எள்ளுப்பேரன் நிக்கொலஸ் லெவிஞ்ச் இதில் பங்கேற்றார். அவருக்கு மேளதாளம், சிலம்பாட்டம், கலை நிகழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரையில் ஏற்றி ஏரிச்சாலையில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
நகராட்சி அலுவலகம் முன் உள்ள லெவிஞ்சின் நினைவுத் துாணில் மரியாதை செலுத்தப்பட்டது. நகராட்சி கமிஷனர் நாராயணன், தாசில்தார் வில்சன்தேவதாஸ், உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன், கூட்டுறவு சங்க தலைவர் ஸ்ரீதர், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X