கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டாக்டர்கள் இடமாற்றம் அரசுக்கு உத்தரவு

Added : நவ 29, 2019
Advertisement


சென்னை, :வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட, அரசு டாக்டர்களின் பணி மாறுதலை நிறுத்தி வைக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்., 25 முதல் ஐந்து நாட்கள், அரசு டாக்டர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு பேச்சு நடத்திய பின், போராட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு, குற்றச்சாட்டு குறித்து, 'மெமோ'வும், சிலருக்கு பணிமாறுதல் உத்தரவுகளும் வழங்கப் பட்டன. இதை உத்தரவை எதிர்த்து, சென்னையை சேர்ந்த அரசு டாக்டர் பாலசுப்ரமணியம் உட்பட, எட்டு டாக்டர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு, இதற்கு முன் விசாரணைக்கு வந்தபோது, ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு, இடைக்கால தடை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு, எம்.தண்டபாணி முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு விரிவான பதில் அளிக்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்; விசாரணையை, டிச., 12க்கு தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X