கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சேதமான சாலையை சீரமைக்கும் வரை 50 சதவீத சுங்கம் வசூலித்தால் என்ன?

Added : நவ 29, 2019
Share
Advertisement
சென்னை, : 'மதுரவாயல் முதல், வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை வரையுள்ள, தேசிய நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்கும் வரை, 50 சதவீத சுங்கக் கட்டணம் மட்டும் ஏன் வசூலிக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.சென்னை, மதுரவாயல் முதல், வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை வரையுள்ள தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. அந்தச் சாலை முறையாக


சென்னை, : 'மதுரவாயல் முதல், வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை வரையுள்ள, தேசிய நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்கும் வரை, 50 சதவீத சுங்கக் கட்டணம் மட்டும் ஏன் வசூலிக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.சென்னை, மதுரவாயல் முதல், வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை வரையுள்ள தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. அந்தச் சாலை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என, நவ., 22ம் தேதி, நீதிபதி எம்.சத்தியநாராயணன், தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார்.இந்த கடிதத்தின் அடிப்படையில், மதுரவாயல் முதல், வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை வரை, மீண்டும் சாலை அமைப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கை, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன் மற்றும் என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.அப்போது, சாலை பராமரிப்பு தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தமிழக நெடுஞ்சாலை துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மதுரவாயல் முதல், வாலாஜாபேட்டை வரையிலான சாலையை முறையாக அமைக்கும் வரை, 50 சதவீத சுங்கக் கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்கக் கூடாது என்றும், கேள்வி எழுப்பினர். மேலும், சென்னையில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாலைகளும் மோசமாக உள்ளன.எனவே, சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனரையும், இந்த வழக்கில் சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு, டிச., 9க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X