கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மனை வரன்முறைக்கு ‛ஆன்லைன்' கோரி வழக்கு

Added : நவ 29, 2019
Advertisement

மதுரை : தேனி மாவட்டம் கம்பம் ரஞ்சித்குமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 'லே-அவுட்கள்' மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த, ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு கொண்டு வந்தது. பலர் பயனடைந்தனர். அரசுக்கு வருவாய் கிடைத்தது.
ஆன்லைனில் பதிவை 2018 நவ.,16ல் அரசு நிறுத்தியது. இதனால் வட்டார வளர்ச்சி மற்றும் நகர் ஊரமைப்பு அலுவலகங்களை நில உரிமையாளர்கள் அணுகும் நிலை உள்ளது. இதற்கு கூடுதல் செலவாகிறது.
அங்கீகாரம் இல்லாத மனைகள், 'லே-அவுட்'களை வரன்முறைப்படுத்த ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறையை மீண்டும் துவக்க பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.
நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு, 'நகர் ஊரமைப்பு இயக்குனர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X