பொது செய்தி

தமிழ்நாடு

புதுமை பெண்ணாய் பாரதி! பசுமை ஆடை ஆராய்ச்சிக்கு ஒப்பந்தம்

Added : நவ 29, 2019
Advertisement

திருப்பூர் :மகாகவி பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய், ஈரோடு பாரதி விளங்குகிறார். புதுமை ஆயத்த ஆடை ரகங்களை உருவாக்குவதற்காக, திருப்பூர், 'அடல் இன்குபேஷன்' மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
ஈரோட்டை சேர்ந்தவர் பாரதி, 28. இளம் பெண் தொழில் முனைவோரான இவர், சென்னிமலையில், 2013ம் ஆண்டு முதல், '5பி வென்சர்' கைத்தறி ஆடை தயாரிப்பு நிறுவனத்தை செயல்படுத்திவருகிறார். சிங்கப்பூரில் சர்வதேச வர்த்தகம் படித்துள்ளார். இவரது நிறுவனம், முற்றிலும் கைத்தறியில், பெண்களுக்கான ஆடை தயாரித்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.புதுவகை ஆடை தயாரிப்பில் ஆர்வம் கொண்டுள்ள பாரதி, திருப்பூர் அடல் இன்குபேஷன் மையத்துடன் இணைந்து, பசுமை ஆடை தயாரிக்க விருப்பம் தெரிவித்தார். ஈரோடு, 'டெக்ஸ்வேலி'யில் நடந்த நிகழ்ச்சியில், அடல் இன்குபேஷன் மையத்துடன், பாரதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழக (ஏ.இ.பி.சி.,) துணைத்தலைவர் சக்திவேல், பாரதியிடம் வழங்கினார்.

'வேலை வழங்குவது லட்சியம்'பாரதி கூறியதாவது:
கடந்த ஆறு ஆண்டுகளாக, கைத்தறி ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். எங்கள் நிறுவனத்தில், 48 கைத்தறிகள் உள்ளன; 20 தறிகள் இயக்கத்தில் உள்ளன. சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்பு மூலம், மின் தேவையை பூர்த்தி செய்கிறோம்.பாரம்பரியம் மிக்க கைத்தறியில், புதுமையான ஆடை ரகங்களை உருவாக்க விரும்புகிறேன்; இதற்காகவே, இன்குபேஷன் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளேன். வாழை நாரில், கைத்தறி துணி தயாரித்து அவற்றுக்கு, காய்கறி போன்ற இயற்கை பொருட்களை கொண்டு, சாயமேற்றப்படும்.
இதற்கு தேவையான வழிகாட்டுதல்களை, இன்குபேஷன் மைய விஞ்ஞானிகள் வழங்குவர். புதிய முயற்சி மூலம், பசுமையான ஆயத்த ஆடைகளை தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். புதுமை ஆடைகள் மூலம், உலகளாவிய வர்த்தக சந்தையில் தனித்துவம் பெறவேண்டும்; ஏராளமான நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும் என்பதே என் லட்சியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவிலோங்கி, இவ்வையம் தழைக்குமாம்' என்கிறார் மகாகவி பாரதியார். பாரதி கண்ட 'புதுமைப்பெண்'ணாய்த் திகழ்கிறார், இந்த 'பாரதி!'

'100 சதவீத பசுமை ஆடை'இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி கூறுகையில், ''ஆயத்த ஆடைகள் பயன்பாட்டுக்குப்பின், நிலத்துக்குள்ளேயே புதைபடுகின்றன. ஆடைகளில் உள்ள ரசாயனம் மிக்க சாயங்கள், நிலத்தின் வளத்தை கெடுக்கின்றன. பசுமையான ஆயத்த ஆடை ரகங்களுக்கு, உலகளாவிய நாடுகளில் அமோக வரவேற்பு உள்ளது. பாரதியுடனான ஒப்பந்தத்தை பயன்படுத்தி, 100 சதவீதம் இயற்கை மாசு ஏற்படுத்தாத பசுமை ஆடை உருவாக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X