பொது செய்தி

தமிழ்நாடு

வலிமை மூலம் வறுமையை விரட்ட முடியும் பெண்களுக்கு சின்னப்பிள்ளை 'அட்வைஸ்'

Added : நவ 29, 2019
Advertisement

நெய்வேலி கிராமப்புற பெண்கள் வலிமையை வெளிப்படுத்துவதன் மூலம், தொடர்ந்து முன்னேறுவதுடன், வறுமையை விரட்ட முடியும் என பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை பேசினார்.
கடலுார் மாவட்டம் என்.எல்.சி., மற்றும் 'விப்ஸ்' எனப்படும் நெய்வேலி மைய பொதுத்துறை நிறுவனங்களுக்கான பெண்கள் அமைப்பின் சார்பில் "நுண் நிதி மற்றும் கிராமப்புற பெண்களின் மேம்பாடு" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.
என்.எல்.சி., ஒற்றாடல் துறையின் முதன்மை காண்காணிப்பு அதிகாரி வெங்கடசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மின்துறை இயக்குநர் ஷாஜி ஜான் முன்னிலை வகித்தார். விப்ஸ் அமைப்பின் தலைவர் விஜயலட்சுமி வரவேற்றார்.
என்.எல்.சி.,மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன் பேசுகையில், 'பத்மஸ்ரீ சின்னப்பிள்ளையின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள களஞ்சியம் என்னும் சிறு கடன்களுக்கான வங்கியின் செயல்பாடு மூலம், அப்பகுதியில் உள்ள பல நுாறு பெண்கள் மற்றும் அவர்தம் குடும்பங்கள் மேன்மையடைந்துள்ளது பாரட்டுக்குரியது. இவரது புல்லுச்சேரி கிராமம், தன்னிறைவு பெற்ற முன்மாதிரி கிராமமாக திகழ்கிறது' என்றார்.
சேர்மன் ராக்கேஷ்குமார் பேசுகையில், ' சின்னப்பிள்ளை தன்னலமற்ற தைரியம் மற்றும் மனத்திடம் வாய்ந்தவர். இதனால் அவர் மட்டுமல்ல அவரை சுற்றியுள்ள கிராமப்புற ஏழை பெண்களுடைய சிரமங்களை உடைத்தெறிந்து, அவர்களின் வெற்றிக்கு வித்திட்டவர்' என்று கூறினார்.

சின்னப்பிள்ளை பேசுகையில், '1990ம் ஆண்டில், எனது சொந்த ஊரில் விவசாய நிலங்களில், சக விவசாய கூலியாட்களோடு பணியாற்றிய போது, விவசாய தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை அறிய முடிந்தது. போதிய வருவாய் கிடைக்காதபட்சத்தில், அவர்களை எதிர்த்து குரல் கொடுக்க முடிய வில்லை.
ஏழை விவசாய தொழிலாளர்களில் நானும் ஒருத்தியாக, 6 மாதம் விவசாயம், எஞ்சிய 6 மாதம் கட்டுமான தொழில் என வாழ்க்கை நடத்தினேன்.
அந்த சமயத்தில் 'தன்' என்னும் அறக்கட்டளையின் உதவியால் குறைந்த வட்டியில் வங்கி மூலம் கடன் கிடைத்தது. பின்னர் ஏழை பெண்களின் ரூ.50, 100 போன்று சிறு தொகையை கொண்டு "களஞ்சியம்' எனும் சுய உதவிக் குழவை துவக்கினோம். அவற்றை 'தன்' அறக்கட்டளை வாயிலாக வங்கியில் முதலீடு செய்தோம்.
குழுவில் உள்ள எவருக்கேனும் நிதி தேவைப்படும் பட்சத்தில், வங்கியை அணுகி பெற முடிந்தது. 8 சுய உதவிக் குழுக்களோடு துவக்கப்பட்ட களஞ்சியம், தற்போது 16 மாநிலங்களில் பரந்து விரிவடைந்துள்ளது. எண்ணற்ற ஏழை பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது களஞ்சியம்' என்றார்.

சின்னப்பிள்ளையின் சமூக பணியை ஊக்குவிக்கும் விதமாக, அவர் வழி நடத்தி சொல்லும், தொழில் முறை வளர்ச்சி அமைப்பான, மனித மேம்பாட்டு அமைப்பிற்கு, என்.எல்.சி., இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்குவதாக என்.எல்.சி.,அறிவித்துள்ளது. விப்ஸ் அமைப்பின் செயலர் ராமலட்சுமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X