புல்லட் ரயில் திட்டத்துக்கு ஆபத்து மூடு விழா நடத்த சிவசேனா முடிவு

Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மஹாராஷ்டிராவில் பதவியேற்றுள்ள சிவசேனா கூட்டணி அரசு, பிரதமர் மோடியின் கனவு திட்டமான, புல்லட் ரயில் திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கான மாநில அரசின் நிதியை, விவசாயிகள் நலனுக்காக ஒதுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து, குஜராத் மாநிலம் ஆமதாபாதிற்கு புல்லட் ரயில் இயக்குவது. ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன், 1.1 லட்சம் கோடி ரூபாயில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது.
கடந்த, 2017ல், ஆமதாபாதில் நடந்த விழாவில், ஜப்பான் பிரதமருடன் இணைந்து, இந்த திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டத்துக்காக, 81 சதவீத நிதியை ஜப்பான், கடனாக கொடுக்கும். மீதமுள்ள, 19 சதவீதத்தை மஹாராஷ்டிரா அரசு கொடுக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் துவக்க விழாவின்போது, சிவசேனா கட்சியை சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது.
புல்லட் ரயில் திட்டம் குறித்து, சிவசேனா மூத்த தலைவர் தீபக் கேஷர்கர் கூறியதாவது:
புல்லட் ரயில் திட்டத்துக்காக, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலங்களை கையகப்படுத்தினால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
பருவம் தவறி பெய்த மழை காரணமாக, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில், விவசாயிகளுக்கு உதவாமல், தேவையில்லாமல் பெருமளவு நிதியை, புல்லட் ரயில் திட்டத்துக்கு ஏன் ஒதுக்க வேண்டும்...
புல்லட் ரயிலில், மும்பையிலிருந்து, ஆமதாபாத்துக்கு செல்வதற்கு, 3,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. விமானத்தில் செல்வதற்கும் இதே கட்டணம் தானே செலவாகிறது. அப்புறம் எதற்கு புல்லட் ரயில் திட்டத்தில் நிதியை வீணடிக்க வேண்டும். அதை, விவசாயிகள் நலனுக்காக செலவிடலாமே.
இவ்வாறு, அவர் கூறினார்.
சிவசேனா மட்டுமல்லாமல், தேசியவாத காங்கிரசும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து, புல்லட் ரயில் திட்டத்துக்கு, சிவசேனா தலைமையிலான அரசு, விரைவில் மூடு விழா அறிவிக்கும் என தெரிகிறது.
இந்த திட்டம் தவிர, நானார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ ரயில் ஸ்டேஷனுக்காக வாகன நிறுத்தம் அமைப்பது ஆகிய திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போட, சிவசேனா தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், மும்பையில், ஏர் இந்தியா விமான நிறுவனம் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற கட்டத்தை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கும், மஹாராஷ்டிரா அரசு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - OOty,இந்தியா
29-நவ-201914:58:39 IST Report Abuse
Arasu நல்லது தான்...விவசாய நிலங்கள் பாதிக்க கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X